Friday, March 19, 2010

எழுதப்படாத கவிதை.....!!!


ஏன் எதற்கென்று தெரியவில்லை.....

ஏதோவொரு நெருடல்

என் இரவுத்தூக்கங்களை

விரட்டியடித்துக்கொண்டிருக்கின்றது....



எத்தனை சிந்தித்தும்

என் வெற்றுக்காகிதத்தில்

வார்த்தைகளேதும்

வந்தமர மறுக்கின்றன.....



இருந்தும் ஏதோ ஒன்று

எழுதப்படாமலே இருப்பதாக

காகிதங்கள் எனைக்குறை கூற

இதோ வருகிறேனென்று

இழுத்து மூடிவிட்டு

எழுந்து நடக்கிறேன்....

இருள் கவிந்த தனிமையில்

மருவின் துணையோடு.......



பிரபஞ்ச வெளியை

உற்று நோக்கியபடி

மின்னும் நட்சத்திரங்களுக்கப்பால்

என்ன இருக்குமென்ற

வியமிகு கேள்விகள்

அவிழ்க்கமுடியாத முடிச்சுக்களாய்...

பதிலின்றிக்கடந்து போக

பிரமித்தபடியே

திரும்பிகொண்டிருக்கிறேன்.....



என் எழுதப்படாத கவிதை

இதுவாயிருக்குமோ

என்றிருந்த தருணத்தில்....


நினைவில் வந்தாள்....


நேற்றைய விடியலில்

வறுமையின் பிடியில்

வாடிய முகத்துடன்

பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுமி......!!!

2 comments:

  1. JackpotCity Casino, Biloxi - Mapyro
    JackpotCity 거제 출장샵 Casino, Biloxi Mapyro. Search for jackpotcitycasino & 구리 출장샵 hotel in Biloxi, MS, revenue, 여수 출장샵 competitors 통영 출장샵 and contact 광양 출장샵 information for

    ReplyDelete