அத்தனைமுறை
கொஞ்சிக்கெஞ்சி
கேட்டபின்னும்
வெட்கமாய் இருக்கிறதென்று
வேறு பக்கம் முகம் திருப்பி
தந்திடாத முதல் முத்தத்தை
அந்தப்பிரிவுப் பயணத்தின்
சற்றே துவக்கத்தின்
தூரத்திலிருந்து
சற்றும் எதிர்பாராமல்
உள்ளங்கையில்
உன் இதழ்களை
ஒற்றியெடுத்து
சிறகடித்துப் பறக்கவிட
முத்தத்தின்
மொத்தத்தையும்
சிதறாமல்
சேகரிக்கிறேன்!
உதடுகளை உரசி
உயிர்மூச்சின்
உள் சென்று
நுரையீரல் நிரப்பி
என் இதயத்தின்
அடிவாரத்தில்
சேமித்து வைக்கிறேன்
உயிருதிரும் இறுதி
நொடிவரை
உனதிந்த
முதல் முத்தத்தை....!
முதல் காதலும் முதல் முத்தமும் என்றும் மறக்க முடியாமல் மனதில்...
ReplyDelete//தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...
ReplyDeleteமுதல் காதலும் முதல் முத்தமும் என்றும் மறக்க முடியாமல் மனதில்...// நன்றி வாசன்!!!
நன்றி வாசன்!!!