Saturday, March 20, 2010

அரிதாரம்.....!!!



அன்றாட வாழ்க்கையின்

அத்தியாயங்களுக்கு

அழகூட்ட முயன்று

அரிதாரம் பூசிப்பூசி

வெறுத்துவிட்ட

வறண்ட உதடுகளுக்கு

தவணை முறையில்

செயற்கையாய்

உயிரெனும்

செரிவூட்டப்படுகின்றது......



காற்றின் எதிர்திசைப்பறவையாய்

இறுகிய மனதும்

தளர் நடையுமாய்

வழியில் வரும்

பரிட்சயமானவர்களின்

புன்னகைக்குத் திணறும்

உதடுகள்

உதிர்த்துவிட்டுச்செல்லும்

ஒப்புக்கொன்றை.....



அதிகார வர்க்கத்தின்

புரிதலின் அலைவரிசையில்

அவசரமாய்

தவறி வரும் வார்த்தைகள்

இதயம் கிழித்து

உதிரம் பருக

இயலாமையின் விளிம்பில்

ஒளிப்படக்கருவியின் முன் நிற்கும்

செயற்கை புன்னகையாய்

அலுத்து விடுகின்றது

அலுவலக வாழ்க்கை



சில தனிமைகள்

சில மௌனங்களென

இதயத்தாடையில்

மென்று துப்பும்

கசப்பான உணர்வுகளில்

அவசியமற்ற

போலிப்புன்னகைகளிலிருந்து

விடுவித்துக்கொள்ள

ஒரு வேளை

விலங்கினமாய் பிறந்திருந்தால்

சிறப்பாய் இருந்திருக்குமென்று

தோன்றும் தருணங்களில்



நிலவொளியை உள்ளங்கையில்

அள்ளி உயர்த்திப்பிடித்து

சிதறடிக்கும் அரிதாரத்தின்

அர்த்தம் தெரியாத

மழலைச்சிரிப்பு

தெளிந்த பிரவாகமாய்

நம் மனசுக்குள்

சிதிலமடைந்த உணர்வுகளின்

சாம்பலில்

சில்லென்றதொரு

கவிதை எழுதிச்செல்லும்......!!!

6 comments:

shammi's blog said...

superah irukku karthik....

கவிதன் said...

//shammi's blog said...
superah irukku karthik....//


Thank U shammi .... :)

CHARLES said...

அரிதாரம் நெஞ்சம் தொடுகின்ற வரிகள் ... கார்த்திக் ...

கவிதன் said...

//CHARLES said...
அரிதாரம் நெஞ்சம் தொடுகின்ற வரிகள் ... கார்த்திக் ...//

வணக்கம் சார்லஸ்....
வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றிகள்!!!

வைகறை நிலா said...

அற்புதம்..

கவிதன் said...

//வைகறை நிலா said...
அற்புதம்...//


உற்சாகத்தை தரும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் வைகறை நிலா!!!