Monday, March 8, 2010
தேவதைகளின் தேவதை....!
வானத்து நட்சத்திரங்கள்
வரையக்காத்திருக்கும்
வாசல்கோலப்புள்ளிகளாய்
சிதறிக்கிடக்கும்
அழகான இரவொன்றை
நாம் அருகிலமர்ந்து
ரசித்திருக்க
அங்கொன்றும் ,
இங்கொன்றுமாய்.....
கவிதையின் முற்றுப்புள்ளிகளை
கன்னத்தில் ஏந்திப்பிடித்திருக்கும்
காதல் தேவதை உந்தன்
பருவத்திமிரிரண்டும் என்
நெஞ்சில் சாய்ந்து
பல்லாங்குழியாட
கவனச்சிதறலை
கவனித்தவளாய்.....
கோடிக்கவிதைகளை
உதட்டு வரிகளில்
ஒளித்து வைத்திருக்கும்
உனக்குள்ளிருந்து
வெட்கத்தில் முக்கியெடுத்த
புன்னகையொன்று
எட்டிப்பார்க்கிறது.....!
உருகும் இரவின்
மௌனம் கலைத்து
மடியில் கவிழ்ந்து
கவிதைகள் வாசிக்கச்சொல்கிறாய்....
என் விரல்கள் கொண்டு
உன் உதட்டு வரிகளை
எழுத்துக்கூட்ட......
கண்கள் செருகி
கனவுச்சிறகுகளில்
மேகங்கள் தாண்டி
தேவதைகள் சுற்றித்திரியும்
தேவலோகத்தெருவொன்றில்
மிடுக்காக நடைபோட,
பவனி வரும்
பால்வெளி நிலவிதுவென்று
பார்த்து ரசிக்கும் தேவதைகளுக்கு
அழகின் உவமைகளாய்
உறுதிசெய்யப்பட்டு
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த போது
பிரம்மன் இழைத்துவிட்ட
பெரிய துரோகமென்று
புலப்படுவதற்கு முன்
புறப்படலாம் வா....!
இதோ...
கனவுப்பயணத்தில்
இரவெங்கும் முடிந்திருக்க
பயணக்களைப்பில்
சோம்பல் முறித்து
விடியலின் மடியினில்
துயில் எழுகிறாள் தேவதை....
இல்லை! இல்லை!
தேவதைகளின் தேவதை....!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கோடிக்கவிதைகளை
உதட்டு வரிகளில்
ஒளித்து வைத்திருக்கும்
உனக்குள்ளிருந்து
வெட்கத்தில் முக்கியெடுத்த
புன்னகையொன்று
எட்டிப்பார்க்கிறது.....!
arumaiyana varikal muththamidukiren eluthiya viralkalukku .
//கார்த்திகேயன் said...
கோடிக்கவிதைகளை
உதட்டு வரிகளில்
ஒளித்து வைத்திருக்கும்
உனக்குள்ளிருந்து
வெட்கத்தில் முக்கியெடுத்த
புன்னகையொன்று
எட்டிப்பார்க்கிறது.....!
arumaiyana varikal muththamidukiren eluthiya viralkalukku //
தங்கள் அன்பிற்கும் , உற்சாகத்திற்கும் மிக்க நன்றிகள் கார்த்திகேயன்!!!
Post a Comment