Saturday, March 20, 2010

நாகரீக கோமாளி...!!!


இது கனவுலகம்.....

அதி நவீன தொழில்நுட்பங்களின்

வேலைப்பாடுகளில்

கட்டுப்பாடுகளுக்கு விலை பேசி

தினம் ஒரு தோற்றமென

மாற்றப்படுகிறது வாழ்க்கை.....!


வரலாறென்று நாம் போற்றித்திரியும்

நேற்றைய எதுவும்

இன்று தடயங்களில்லாமல்

புதுப்பிக்கப்படுகின்றன...

எப்படியான வாழ்க்கைமுறை

இதுவரை கடந்ததென்பதைக்கூட

திரும்பிப் பார்க்க நேரமில்லை....



ஒளிப்பதிவுக்கருவிக்கு

எதிரில் நின்று பேசும்

மனனம் செய்த வாக்கியங்களெல்லாம்....

வாழ்க்கை என்று வரும் போது

சாத்தியப்படுவதில்லையே....



கால ஓட்டத்தில்

மாயை நிறைந்த

அறிவியல் மாற்றங்கள்

இயல்பு நிலைக்கு

விலை பேசிக்கொண்டிருக்க

அத்தனையும் உதறித்தள்ளிவிட்டு

புதிய உடையில்

நுழைந்து கொள்கிறது உலகம்....



பழமை பேசித்திரியும்

நாமெல்லாம்

பைத்தியமாக்கப்படுவதற்குள்

ஆளுக்கொரு முகமூடியுடன்

தயாராகுங்கள்...........

நாகரீகக் கோமாளியாவதற்கு...!!!

10 comments:

M.Rishan Shareef said...

நல்ல கவிதை !

Unknown said...

ம்.. நல்லா இருக்கு..

கவிதன் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...

நல்ல கவிதை !//
வணக்கம் ரிஷான் ஷெரிப் ... தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றிகள்!

கவிதன் said...

//ஆறுமுகம் முருகேசன் said...

ம்.. நல்லா இருக்கு..//

நன்றி ஆறுமுகம்!!!

வைகறை நிலா said...

இன்றைய நிலையை இயல்பாக ,சரியாக எழுதியிருக்கிறீர்கள்..

கவிதன் said...

// வைகறை நிலா said...
இன்றைய நிலையை இயல்பாக ,சரியாக எழுதியிருக்கிறீர்கள்...//


உங்கள் முதல் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றிகள் வைகறை நிலா!!!

அண்ணாமலை..!! said...

கவிதன்! அருமையான கவிதை !
மிகச்சரியான வரிகள்!
உங்கள் கவிதைகளுக்கான எழுத்து அமைப்பை(font)கொஞ்சம் கனமாக்க
அல்லது மெருகூட்ட
முடியுமா பாருங்கள்!
இன்னும் கவனம் பெறும்!

கவிதன் said...

// அண்ணாமலை..!! said...

கவிதன்! அருமையான கவிதை !
மிகச்சரியான வரிகள்!

உங்கள் கவிதைகளுக்கான எழுத்து அமைப்பை(font)கொஞ்சம் கனமாக்க
அல்லது மெருகூட்ட
முடியுமா பாருங்கள்!
இன்னும் கவனம் பெறும்! //


ஊக்கம் தரும் பின்நூட்டத்திற்கும் உங்கள் அன்புக்கும் வழிகாட்டுதலுக்கும் மிக்க நன்றிகள் அண்ணாமலை....

elamthenral said...

உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்
கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்

இந்த பாடல் வரிகள் இதற்கு பொருத்தமாய் என்று நினைக்கிறேன்....

அருமை.... வாழ்த்துக்கள்..!!

கவிதன் said...

//
புஷ்பா said...

உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்
கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்

இந்த பாடல் வரிகள் இதற்கு பொருத்தமாய் என்று நினைக்கிறேன்....

அருமை.... வாழ்த்துக்கள்..!! //

உங்கள் அன்புக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள் புஷ்பா.