Saturday, March 13, 2010

அவள் மட்டும்......!


துருவங்களின்

தொட்டடுத்த தூரத்தில்

காட்சிகளுக்கு

புது  வண்ணம்

பூசிக்கொண்டிருக்கும் சூரியன்

விடைபெறும் தருணத்தில்.........

வழக்கம் போல்

நதிக்கரையில்

கால் போன போக்கில் நடைபோட

காற்றில் போக்கில்

சுற்றித்திரியும்

இலைச்சருகுகளாய்

கனவுகள்

மனசுக்குள் இடம்பெயர

நிசப்தத்தின் உச்சத்தில்

தவமிருக்கும்

அவள் நினைவுகள்

மெல்லத்துயில் எழுகின்றன.....

தனிமையில்

உயிர்பெறுகின்றன.....


உயிரணுக்களும்,

உணர்வுமொட்டுக்களும்

ஓய்வுக்காலம் முடிந்து

பணிக்குத்திரும்பும் அந்த

இருள் சூழ்ந்த

மங்கலான


மாலைப்பொழுதில்

மறுகரையில் நாணல்கள்

காத்திருக்கும் என்றறிந்தும்

அவளின் வரவுக்காய்

கைகட்டி காத்திருக்கிறது

ஊர் சுற்றும் காற்று.......


வேண்டுமென்றே

மௌனம் கலைப்பதற்காக

என் விரல்களிலிருந்து விடைபெறும்

கூழாங்கற்களும்

வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன

தண்ணீரின் மேற்பரப்பில்.....

அதே அவளுக்கான

வரவின் எதிர்பார்ப்புடன்....


என் இரவெங்கும்

சோகங்கள் ஒருசேர

அவள் நினைவுகளை

நிலவின் துணையோடு

வரவழைத்திருக்க

அவள்

மட்டும்

வந்தபாடில்லை ....!!!

4 comments:

வைகறை நிலா said...

அற்புதமான கவிதை...

கவிதன் said...

// வைகறை நிலா said...

அற்புதமான கவிதை... //

தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள் வைகறை நிலா!!!

காஞ்சி முரளி said...

"அவள் மட்டும்"... என்ற இக்கவிதை.. அருமை...

இயற்கை எழிலையும்.. காதலியையும் ஒப்பிட்டு...
அழகான.. அர்த்தமுள்ள கவிதை...

நட்புடன்...
காஞ்சி முரளி...

கவிதன் said...

// காஞ்சி முரளி said...
"அவள் மட்டும்"... என்ற இக்கவிதை.. அருமை...

இயற்கை எழிலையும்.. காதலியையும் ஒப்பிட்டு...
அழகான.. அர்த்தமுள்ள கவிதை...

நட்புடன்...
காஞ்சி முரளி... //


மிக்க நன்றிகள் காஞ்சி முரளி... !!!